07/01/2011 - 08/01/2011

Tuesday 26 July 2011

ஜாபர் சேட் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு


சென்னை: முன்னாள் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ஜாபர் சேட்டின் சென்னை அண்ணாநகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். ஜாபர் சேட் தற்போது மண்டபம் அகதி முகாம் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 23 July 2011

நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் ரெய்டு



கொச்சி: கேரள முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்குச் சொந்தமான திருவனந்தபுரம், கொச்சி, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் வருமான வரித்துறையினர், ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்லால். இவர் மலையாளம், தமிழ் உட்பட, பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். இவர், பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான, மறைந்த கே.பாலாஜியின் மருமகன். இவருக்கு திருவனந்தபுரம், கொச்சி, சென்னை உட்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவரைப் போலவே, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மம்முட்டி. இவர், கேரளா, வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவ்விரு பிரபல நடிகர்களும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலை விரிவாக்கம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, மூன்று கார்களில் வந்த வருமான வரித்துறையினர் திடீரென நுழைந்தனர். மம்முட்டி வீட்டில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடந்ததால், அன்று அவரும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், காலையிலும் சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக, ஷிப்ட் அடிப்படையில், மாறி மாறி வந்து சோதனை நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5 மணி வரை நடந்த சோதனையில், வீட்டில் இருந்த பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மம்முட்டியின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை, எழும்பூரில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டிற்கு காலை 7 மணிக்கு, வருமான வரித்துறையினர் சென்ற போது, அந்த வீடு ஏற்கனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, எழும்பூர், காசா மேஜர் சாலையில் உள்ள மோகன்லாலின் மாமனார், பழம்பெரும் நடிகர் பாலாஜியின் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்தவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட வருமான வரித்துறையினர், வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, நடிகர் மோகன்லால், சென்னையில் இல்லை. வெளியூரில் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாக கூறப்பட்டது. பிற்பகல் 2 மணிவரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினரிடம் கேட்ட போது, "இது வழக்கமான ஒன்றுதான், அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்த பின், தகவல்களை அறிக்கை வாயிலாக தெரிவிக்கிறோம்' என்று, மழுப்பி விட்டனர். 

நடிகர் மம்முட்டி வீட்டில், வருமான வரித்துறை விசாரணை பிரிவு இயக்குனர் தலைமையில், பத்து பேர் கொண்ட அதிகாரிகள், சோதனையில் பங்கேற்றனர். நடிகர் மோகன்லால் வீட்டில், ஒரு பெண் அதிகாரி உட்பட மூன்று பேர் கொண்ட குழு, சோதனையில் ஈடுபட்டது. இவ்விரு நடிகர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

"ஷூட்டிங்'கில் மோகன்லாலிடம் விசாரணை : ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் "ஷூட்டிங்'கில் இருந்த மலையாள நடிகர் மோகன்லாலிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளத்தில், மலையாள நடிகர் மோகன்லால், சினிமா படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். மதுரை, மத்திய வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நேற்று மதியம் 1.15 மணிக்கு மூன்று கார்களில் வாலிநோக்கம் வந்தனர். மோகன்லாலை "கேரவன்' உள்ளே அழைத்துச் சென்று, அவரிடம் மதியம் 1.30 முதல் மாலை 5.30 மணி வரை விசாரணை நடத்தினர். இதன்பின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய மோகன்லால், தொடர் விசாரணைக்காக அதிகாரிகளுடன் மதுரைக்குக் கிளம்பிச் சென்றார். விசாரணை குறித்து அதிகாரிகள் தகவல் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர். 

 

பிளஸ் 2 உடனடி தேர்வு 25ம் தேதி ரிசல்ட்!


சென்னை : கடந்த ஜூன் மாதம் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் 25ம் தேதி பிற்பகல் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www.pallikalvi.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.inஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். தனித் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல்களை 29ம் தேதி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பிற்பகல் நேரத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். 
தக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

மேற்கண்ட உடனடித் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் 26 முதல் 28 வரை அனைத்து முதன்மைக் கல்வி அலவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வாங்க விரும்புவோர், ‘அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை&6’ என்ற பெயரில் டிடி எடுத்து சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 28ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

Friday 22 July 2011

Saturday 16 July 2011

பத்மநாபசாமி கோயில்


திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகளில் கிடைத்த பொக்கிஷத்தை பாதுகாக்க, வெடிகுண்டால் கூட தகர்க்க முடியாத இரும்பு அறையை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ரகசிய அறைகளில் கிடத்த தங்க குவியல்களை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாமல் கேரள அரசு திணறி வருகிறது. கோயிலுக்கு தற்போது அளிக்கப்படும் பாதுகாப்பு பற்றி அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, கேரள அரசு அமைத்த நிபுணர் குழு, கோயில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், அதிநவீன ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், லேசர் சென்சார்கள், வெடிகுண்டு வைத்தால் கூட தகர்க்க முடியாத இரும்பு அறைகள் அல்லது கான்கிரீட் அறைகள், கோயில் அருகே சுரங்கப்பாதை தோண்ட முயற்சித்தால் கண்டுபிடிக்க கூடிய அதிநவீன கருவிகளை கோயிலில் அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இப்போதைய பட்ஜெட்டில் ரூ.1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதால், கோயிலுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

சாய் பாபா மகா சமாதி திறப்பு


சாய் பாபா மகா சமாதி திறப்பு

சத்ய சாய் பாபாவின் மகா சமாதி இன்று திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவருடைய சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

BSNL NEW OPPERTUNITY


சிம்கார்டில் பேசும் புதிய போன்:அறிமுகப்படுத்தியது பி.எஸ்.என்.எல்.,
ஜூலை 16,2011,09:29
கோவை : மொபைல் சிம்கார்டு மூலம் பேசக்கூடிய, பிக்சேர்டு ஒயர்லெஸ் போனை பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம், பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. புதிய போனை அறிமுகம் செய்து, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் ஹரிபாபு கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் போனில் இருந்து, 'பிரண்ட் அண்டு பேமிலி' திட்டத்தில் மொபைல், லேண்ட்லைன் என, மூன்று எண்ணிற்கு சலுகை கட்டணத்தில் பேசலாம். இந்த திட்டத்தில் இரவு நேரத்தில் 10 பைசா, பகல் நேரத்தில் 20 பைசா வசூலிக்கப்படும். இந்திய தொலைபேசி அட்டை (யு.ஐ.டி.சி., கார்டு) மூலம் இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்கிற்கு பேசினாலும், வினாடிக்கு ஒரு பைசா செலவாகும். வெளிநாட்டிற்கு பேசும் போது, வினாடிக்கு மூன்று பைசா வசூலிக்கப்படுகிறது. யு.ஐ.டி.சி., கார்டு திட்டத்தில், ஐந்து எண்ணிற்கு சலுகை பெற முடியும்.
ஜி.எஸ்.எம்., வகையை சேர்ந்த 'பிக்சேர்டு ஒயர்லெஸ்' (எப்.டபிள்யு.டி.,) போன் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனில், மொபைல் சிம்கார்டு பொருத்தி பேச முடியும். லேண்ட்லைன் மாதிரி உபயோகிக்கும் முறை உள்ளதால், வயதானோர் எளிதாக கையாள முடியும். மெசேஜ், யு.பி.எஸ்., கேபிள் வசதி இருக்கிறது. இதன் விலை 1,450 ரூபாய். கேபிள் வசதி இல்லாத இடம், கிராம பகுதி, மொபைல் போன் டவர் பிரச்னை உள்ள இடங்களில் எப்.டபிள்யு.டி., பயன்படுத்தலாம். அன்பு ஜோடி பிளான், நேசம் லைப்டைம் பிரிபெய்டு, ரக்ஷக் பிளான் என, பல பிரிபெய்டு திட்டங்கள் உள்ளன. புதிய திட்டங்களுக்கான ரீசார்ஜ் கூப்பன்கள், எல்லா சில்லரை விற்பனை கடைகளிலும் கிடைக்கும். குமரகுரு கல்லூரி, கல்கி தெரு, மத்திய பஸ் ஸ்டாண்ட், எச்.என்.வி.எஸ்.லே-அவுட் உள்ளிட்ட இடங்களில் 3ஜி; உக்கடம், பொள்ளாச்சி (கே.சீ.பீ.,), கரட்டுப்பாளையம் பகுதியில் புதிதாக 2ஜி டவர் அமைக்கப்பட்டுள்ளது. கோவை டைட்டில் பார்க், காளப்பட்டி, திருப்பூர் ஆகிய இடத்தில் புதிய தொலைபேசி நிலையம், ஒயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கு புதிய டவர்கள் நிறுவப்பட உள்ளன. இவ்வாறு, ஹரிபாபு கூறினார். கோவை பொதுமேலாளர் சுனிதா, துணை பொதுமேலாளர் (திட்டம்) நாகராஜு, துணை பொதுமேலாளர் (மார்க்கெட்டிங்) வெங்கட்ராமன் உடனிருந்தனர்.

Friday 15 July 2011

SUZLON ENERGY


சென்னை நிறுவனத்திடமிருந்து ரூ. 650 கோடிக்கு ஆர்டர் பெற்றது சுஸ்லான்
ஜூலை 15,2011,16:19
மும்பை: சென்னையைச் சேர்ந்த ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான ஆர்டர்களை சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமான ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனத்திடமிருந்து சுஸ்லான் ஆர்டர் பெற்றிருப்பது இத்துறையில் இந்நிறுவனத்தின் விரைவான வளர்ச்சியை காட்டுவதாக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் துளசி டாண்டி தெரிவித்தார். இந்த ஆர்டர் சுமார் 48 யூனிட்டுகள் எஸ் 9 எக்ஸ் சூட்டுகளையும், எஸ் 9 5 காற்றாலை டர்பைன்களையும் உள்ளடக்கியதாகும்.

SUZLON ENERGY


சென்னை நிறுவனத்திடமிருந்து ரூ. 650 கோடிக்கு ஆர்டர் பெற்றது சுஸ்லான்
ஜூலை 15,2011,16:19
மும்பை: சென்னையைச் சேர்ந்த ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான ஆர்டர்களை சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமான ஓரியண்ட் கிரீன் பவர் கம்பெனி நிறுவனத்திடமிருந்து சுஸ்லான் ஆர்டர் பெற்றிருப்பது இத்துறையில் இந்நிறுவனத்தின் விரைவான வளர்ச்சியை காட்டுவதாக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் துளசி டாண்டி தெரிவித்தார். இந்த ஆர்டர் சுமார் 48 யூனிட்டுகள் எஸ் 9 எக்ஸ் சூட்டுகளையும், எஸ் 9 5 காற்றாலை டர்பைன்களையும் உள்ளடக்கியதாகும்.

FLASH NEWS


சரிவுடன் முடிந்தது பங்குச்சந்தை
ஜூலை 15,2011,16:39
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.28 புள்ளிகள் குறைந்து 18561.92 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.9 புள்ளிகள் குறைந்து 5581.10 புள்ளிகளில் முடிவடைந்தது.

PSLV-C17




With the 53-hour countdown for the launch of the Polar Satellite Launch Vehicle (PSLV-C17) commencing at 11.48 a.m. on Wednesday, the stage is set for the rocket's lift-off from Sriharikota at 4.48 p.m. on Friday.
The PSLV-C17 will put in orbit communication satellite GSAT-12, which weighs 1,410 kg. It is a more powerful version of the standard PSLV, called PSLV-XL that will put the satellite in orbit after a 20-minute flight.
“The countdown is going on satisfactorily,” said P.S. Veeraraghavan, Director of Vikram Sarabhai Space Centre (VSSC) in Thiruvananthapuram, from Sriharikota on Wednesday. The launch window is between 4.48 p.m. and 5.08 p.m. “We will use the earliest opportunity” at 4.48 p.m. for the rocket's ignition, he said. The four-stage PSLV was built by the VSSC.
This is the second time that a powerful PSLV-XL version will lift off from the second launch pad at Sriharikota. It was earlier used to put Chandrayaan-1 into orbit on October 22, 2008. While the six strap-on booster motors of the standard version of the PSLV carry a total of nine tonnes of solid propellants, the strap-on motors in the XL version are powered by a total of 12 tonnes of fuel.
“This is [also] the second time that a PSLV is being used to put a satellite in a geo-synchronous transfer orbit (GTO),” said Mr. Veeraraghavan. It was earlier used on September 12, 2002 to put Kalpana, a weather satellite, in GTO.
Raising the apogee
In fact, the PSLV-C17 will put GSAT-12 in a sub-GTO with a perigee (nearest point to the earth) of 284 km and an apogee (farthest point from the earth) of 21,000 km. After it is put in a sub-GTO, commands will be given to the liquid apogee motor (LAM) on board the satellite to boost the apogee to 36,000 km. After it is done, commands will be given to boost the perigee from 284 km to 36,000 km.
“For the first time, in our communication satellites, we are raising the apogee from 21,000 km to 36,000 km in two stages. This is a crucial manoeuvre. To raise the apogee, you have to fire the LAM when the satellite is in its perigee. So the LAM firing is a challenge,” said a satellite technologist of the Indian Space Research Organisation (ISRO). The satellite will thus reach a circular geo-stationary orbit of 36,000 km.
Advanced mission computer
“A significant feature of the PSLV-C17,” said Mr. Veeraraghavan, “is that it will use an advanced mission computer with indigenous processors. The ISRO built the computer. We also built our own processors. The advanced mission computer will be used for navigation, guidance and controlling” the rocket. The ISRO earlier used imported processor chips in the PSLV missions. In the PSLV-C12 mission in 2009, it used one chain of imported processors and another chain of indigenous processors. “In this mission, both the prime and the redundant chains have indigenous processors,” Mr. Veeraraghavan said.
The GSAT-12, with 12 extended C-band transponders, will be used for tele-medicine, tele-education, telephone and various other communication purposes.
This is the 19th PSLV mission, out of which 17 have been successful in a row. The PSLV-C17 weighs 310 tonnes and is 44 metres tall.

Thursday 14 July 2011